Monday, September 27, 2010
முற்றும்!
நான் ஒரு தனிப்பட்ட நபரை குறித்து எழுதியிருந்தாலும், இந்தப் பதிவை ஒரு மேலோட்டமாக பார்க்க வேண்டுகிறேன்.
"சித்தர்கள் இராச்சியம்" வலைப்பகுதி, அரிய சித்தர்களின் பாடல்களை அழிவின் நிலையில் இருந்து காப்பாற்றி வரும் ஒரு தளம். சுவடிகளிலிருந்து மின்னூலுக்கு மாற்றுகிறார். ஆன்மீக சேவைக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமே!.
இந்தத் தளத்துக்கு வரும் வாசகர்கள், அங்கே உள்ள ஆச்சரியத்தக்க விசயங்களைத் தான் படிக்க வருகிறார்கள். விதிவிலக்காக சில பேர் இருக்கலாம். தோழி அவர்கள், தன்னை அறிதல் பற்றிய பதிவையும் ஆங்காங்கே இடுவார். கொஞ்சம் சுவாரஸ்யமான தலைப்புக்கள் இருந்தால் தான், மக்கள் வருவார்கள். அப்படியாவது வருபவர்கள், நல்ல நெறிகளைப் பார்ப்பார்கள் என்பது அவரது நோக்கம். ஆனால், நம் வாசகர்களோ! சித்தர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்றே நினைகிறார்கள். காரணம், இவர் சித்தர்களின் சித்துக்களையே அதிகம் கூறியுள்ளதால். மெய்ஞானம் அடைவது என்பது குதிரைகொம்பு என்பது போல் இருக்கும், இவர்கள் தலைப்புகளில் பெரும்பான்மையாக இப்படி இருந்தால், யார் அதை செய்வார்கள்.இடையிடையே, இதை ஒரு தகவல் மார்க்கமாகவே வெளியிடுகிறேன் என்று கூறுகிறார், அப்படி என்றால் நீங்கள் சித்தர்களைப் பற்றி எழுத வேண்டாம், சினிமாவைப் பற்றி எழுதுங்கள் இன்னும் சுவாரசிய மாக இருக்கும்.
///////////////////////////////////////////////////////////////////////////
மக்களின் மனதில் இருந்து மாயையும், போலிகளையும் விளக்கும் விதத்திலான இடுக்கைகள் அவர் தளத்தில் வெகு குறைவே!.
எந்நேரமும், சித்தர்களின் சித்துகளையே சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா?
அவர்கள் எப்படி அந்த நிலையை அடைந்தார்கள் என்று கூற வேண்டாமா?
இரண்டும் இருக்க வேண்டும், அதில் சம விகிதம் (50 %,50 %) கையாள வேண்டும்.
ஞானம் அடைவதற்கான மார்க்கத்தையே அவர்கள் பெரிதும் விரும்புவார்கள்.
அப்படி செய்தால் தான் உங்கள் தளம் பூரணத்துவம் பெறும்.
இல்லையெனில், சித்தர்களின் மகிமைகள் என்று உங்கள் தளத்துக்கு பேரிட்டுக் கொள்ளுங்கள்.
எங்களுக்கு திருக்குறள் ஒன்றே போதும்.
இதைக் குறிப்பிட்டு நான் கருத்துரைத்த போது, அதை அவர் பதிய மறுத்து விட்டார்.
இந்த யுகத்தில் பக்தி மார்க்கம் 10% தான் மற்றவர்களை மாற்றும்.
ஞான மார்க்கம் 40 % வரை செல்லும்.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////
தோழியின் நண்பர்கள் பலர் என்னை எதிர்த்தும், தூசியும் கமெண்ட்ஸ் அனுபியிருன்தனர். அதில், சில பேர் காது கூசும் அளவுக்கு கடுஞ்ச்சொற்க்களை பிரயோகப்படுத்தி எழுதியிருந்தனர். தோழியின் நண்பர்கள் என்று கூறிகொள்ளும் சிலர், ஆன்மீக நிலையில் கொஞ்சம் கூட இல்லை. ஒருவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும், அவன் தாயை இழித்துப் பேச அனுமதியில்லை. இவர்களா, தோழியின் நண்பர்கள் என்று நகைக்க தோன்றுகிறது. இப்படிப் பட்டவர்கள் தான் அந்த தளத்தை பார்வை இடுவார்கள் போலும். இவர்களால், தோழிக்கு எந்த சமூக மாற்றமும் ஏற்ப்படப் போவதில்லை.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////
சிலர் நீங்கள் உங்கள் திறமையை காட்டுங்கள், ஏன் மற்றவிரடமிருந்து காப்பி அடிக்கறீங்க', பழித்து பேசறீங்க... நீங்க உங்க திறமைய காமிங்க நு சொன்னாங்க. காப்பி அடிப்பது தவறு தான்.
உலகில் பிறந்த அனைவருக்கும், அந்தக் கலை வந்துவிடுமா?.
உங்களை art picaso ஆகச் சொன்னால், உங்களால் முடியுமா? அதெல்லாம், பிறப்பிலேயே வர வேண்டும். அதைப் பொருது தான் பேசுவதும், தளத்தில் பதிவதும். இதற்காக ஒருவரை ஏளனமாகவும், மற்றொருவரை உயர்வாகவும் பார்க்கத் தேவையில்லை. அவரவர் வினைக்கு ஏற்பவே வருகிறார்கள், இதில் நம் பங்கு, தவறு செய்யாமல் இருப்பதே.
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
Those 2 followers, please get exit soon.
ReplyDeleteஅன்பு நன்பரே உங்களை பாராட்டுகிறேன்.நானும் அந்த தளத்தை விரும்பி பார்த்தவன் தான்.எதிர்கேள்வி கேட்டால் என்பதிலா கட் பண்ணிவிடுவார்.நன்றி
ReplyDeleteI would like to your thats. Realy ver like that site.I think She know when,what,wich do. I need also more information from sithar. How to learn?
ReplyDelete