Sunday, December 19, 2010

தோழிக்கு பிரபலமாக ஆசை




அன்புள்ள வாசகர்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும்,

சித்தர்கள் இராச்சியம் வலைதள ஆசிரியர் தோழியின் சிறு முரண்பாடுகளை உங்களிடம் வெளிச்சம் காட்டி கொள்ள விரும்புகிறேன்.
அவர் தளத்தில் சித்தர்களைப் பற்றியும், அவர்களின் மகத்துவத்தையும் காணலாம். ஆனால், அவரது வலைத்தளத்தில் அண்மையில் தான் இதை என்னால் பார்க்க முடிந்தது.  பாருங்கள் இந்தப் படத்தை.



சமீபத்தில் எனக்கு சில mails வந்தது, அதில் சித்தர்கள் ராச்சியம் தளத்தில் இருந்து எந்த விசயங்களையும் அவர் அனுமதி இல்லாமல் போட்டால், வந்து அதை எடுக்கச் சொல்லி மறுப்பு தெரிவிக்கிறாராம்.  ஏனெனில் அவர்  இந்தத் தளத்தின் விசயங்களை copyrights  ஆக வைத்துள்ளார்.

சித்தர்கள் பாடல்களை காப்பி செய்ய கூடாதுன்னு சொல்ல நீ யாரம்மா.
சித்தர்கள் பாடலென்ன உங்களுடைய தனிப்பட்ட சொத்தா.அல்லது நீங்க எழுதின பாடலா.?
நீங்களே சித்தர்கள் பாடல்களை வச்சு தா எழுதறீங்க.
அவங்களே உலக நன்மையைக் கருதி வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்காங்க.
இதில் நீ வெறும் உரை மட்டும் தான் எழுதிகிறாய். நியாபகம் வைத்துக்கொள். சித்தர்களின் பாடல்களை எவர் வேணுமுனாலும் எடுக்கலாம், அதன் மகிமைகளை பிறர் அறிய செய்யலாம்.

உங்களது நோக்கம், சித்தர்களின் மகத்துவத்தை உலகத்தார் அறியும் வண்ணம் செய்வதது தானே?, அதை மற்றவர் எடுத்துப் பரப்பினால், இன்னமும் தெரியாதவர்களுக்கும் தெரியுமல்லவா. அப்படியே காப்பி செஞ்சு எடுத்திருந்தாலும், எப்படியும் உங்க தளத்தில் இருந்து எடுத்தது தாணு தெரிந்து விடும்.
உண்மையை ரொம்ப நாள் மறைக்கமுடியாது.
இதை நீங்கள் copy செய்ய கூடாதுன்னு சொல்ல இது உங்கள் தனிப்பட்ட கற்பனைக் கதையா.
தோழி, உங்கள் எண்ணம் நீங்கள் புகழ் பெற வேண்டும் என்பதா, அல்லது சித்தர்கள் அருளியதை மக்கள் பார்க்கும் வண்ணம் செய்வதா?
உங்கள் எண்ணம், நீங்கள் பிரபலமாகவேண்டும் என்பது தானே.
இது போன்ற சேவைகளை செய்பவர்களுக்கு மனதில் ஆனந்தம் என்றும் பூத்திருக்கும். சித்தர்களின் தகவல்களை பலர் அறிய உதவி செய்வார்கள்,
நீங்களோ, இது என்னுடைய விஷயம், நான் தான் எழுதினேன்னு சொன்னீங்கனா, ..... நீங்க ஆன்மீகவாதி அல்ல. வெறும் தமிழ் பாடல்களுக்கு உரை எழுதறீங்க அவ்வளவு தான்.

No comments:

Post a Comment